சமூகம்

 • டிரைக்கோடெர்மா விரிடி

  #டிரைக்கோடெர்மாவிரிடியை நிலத்திற்க்கு பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை டிரைக்கோடெர்ம்h விரிடி நன்மை செய்யும் பச்சை நிற éஞ்சானமாகும். பயிர்களில் மண் மற்றும் விதையின் மேல்புறம் பரவும் நோயிகளை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சானக் கொல்லியாகும். இது வேர்களுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. டிரைக்கோடெர்மா விரிடி பயிர்களில் உண்டாகும் வேர் அழுகல், கிழங்கு அழுகல், மற்றும் வாடல் நோய் போன்ற நோய்கள் வராமல் காக்கின்றது. டிரைக்கோடர்மா விரிடியை எந்த பயிருக்கு எப்படி பயன்படுத்துவதுஎன்று தெரிந்து கொள்ளலாம் டிரைக்கோடெர்மா விரிடியை காய்கறிகள், பழவகைகள், தானியங்கள், பயறுவகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மலைப்பயிர்கள், பூச்செடிகள் மற்றும் கொடி வகைகள் பயிர்களுக்கு பயன்படுத்தலாம். டிரைக்கோடெர்மா விரிடியை 1 லோடு மக்கிய இயற்க உரத்துடன் கலந்து 10 - 15 நாட்கள் நிழலில் வைத்து பிறகு அடியுரமாக நிலத்தில் இடவேண்டும். அதேபோல விதைநேர்த்தி, கிழங்கு நேர்த்தி மற்றும் நாற்று நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும், முக்கிய குறிப்பு என்ன வென்றால் விரிடியை பயன்படுத்தும் போது ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது பின்போ இரசாயன உரங்களை பயன்படுத்தக் கூடாது.

  5

  0

  2

 • Our sugar canes colour will be yellowish why

  Change of leaves

  4

  0

  3

 • முருங்கை சாகுபடி

  #முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு பூ எடுக்கக் கூடிய பருவத்தில் இருக்கும் செடிக்கு பூன் வளர்சி டானிக் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும் பூ அதிகம் பூக்கும் நுண் சத்தாகவும் செயல்படும். பிஞ்சுள் அதிகம் எடுத்து மகசூல் கொடுக்கும் . முருங்கையில் பரவலாக செடியின் இலைகளில் நூலம்படைபோல் பின்னி காணப்படும் மற்றும் இலைகள் மஞ்சளாகி பிறகு காய்ந்து காணப்படும் இதற்கு மோனோகுரோட்டோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவும் . முருங்கையில் பழ ஈ தாக்குதல் தென்படும் அவற்றை கட்டுப்படுத்த ஆரம்பத்திலேயே இனக்கவர்ச்சி பொறி வைத்து கவர்ந்து கட்டுப்படுத்தலாம். இல்லாவிட்டால் காய் , மரத்தில் பிஜின் போன்ற திரவம் வடிந்து காய் கசப்புத்தன்மையாக இருக்கும் விற்பனை செய்ய முடியாது இவற்றை முருங்கை விவசாயிகள் கவனத்தில் கொண்டு தக்க பயிர்பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும்.

  3

  0

  18