சாம்பல் நோய்

  • அறிகுறிகள்

  • தூண்டுதல்

  • உயிரியல் கட்டுப்பாடு

  • இரசாயன கட்டுப்பாடு

  • தடுப்பு முறைகள்

சாம்பல் நோய்

Erysiphaceae

பூஞ்சைக்காளான்


சுருக்கமாக

  • துடைத்து விடக் கூடிய மாவு போன்ற ஒரு படலம் இலைகளின் மேல் தோன்றும்.

புரவலன்கள்:

ஆப்பிள்

பேரிக்காய்

புற்றுப்பழம்

விதையவரை

கத்திரிக்காய் செடி

சேலாப்பழம்/செர்ரி

சீமைவாதுழைப்பழம்

பிளம்ஸ்

குழிப்பேரி

பட்டாணி

வெள்ளரிக்காய்

பூசணிக்காய்

சீமை சுரைக்காய்

தக்காளி

பச்சடிக்கீரை

உருளைக் கிழங்கு

உளுந்து & பச்சை பயிறு

பட்டாணி மற்றும் துவரம் பருப்பு

கொண்டைக் கடலை & பருப்பு வகைகள்

பருத்தி

இதர

மக்காச்சோளம்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

முலாம்பழம்

பருப்பு வகை

அலங்காரச் செடி வகை

அறிகுறிகள்

முதலில், இலைகளின் மேல் புறத்தில் மஞ்சள் புள்ளிகள் தோன்றும். நோய் முற்றிய கட்டத்தில், வெள்ளை நிறத்தில், அதன் பின் சாம்பல் நிறத்தில், மாவு போன்ற படலம், இலைகள், தண்டுகள் மற்றும் பழங்களின் மேல் பரவும். தாவரத்திலிருந்து ஊட்டச்சத்துக்களை, பூஞ்சை காளான் எடுத்துக் கொள்ளும். சாம்பல் போன்ற படலம் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதை தடை செய்யும், இதன் விளைவாக தாவரங்களின் வளர்ச்சி குன்றிவிடும். நோய் தீவிரமடையும் போது, பாதிக்கப்பட்ட பாகங்கள் சுருங்கி, இலைகள் உதிர்ந்து, தாவரங்கள் இறந்து விடக்கூடும். அடிச்சாம்பல் நோய்க்கு மாறாக, இந்த மாவுப்போன்ற சாம்பல் நோயை (பவுடரி மில்ட்யூ) ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட முடியும்.

தூண்டுதல்

இலை மொட்டுகள் மற்றும் பிற தாவரச் சிதைவுகளுக்கு உள்ளே பூஞ்சை வித்துக்கள் குளிர் காலத்தைச் சமாளித்து வாழ்கின்றன. காற்று, நீர் மற்றும் பூச்சிகள், அருகிலுள்ள தாவரங்களுக்கு இந்த வித்துக்களைப் பரப்புகின்றன. பூஞ்சை காளானாக இருந்தாலும், இந்த மாவுப்போன்ற சாம்பல் நோய், பொதுவாக உலர்ந்த நிலையிலும் உருவாகலாம். இது 10-12°செல்சியஸ் வெப்பநிலையில் உயிர் வாழ்கிறது, ஆனால் உகந்த நிலைகள் 30 °செல்சியஸில் காணப்படுகின்றன. அடிச்சாம்பல் நோய்க்கு மாறாக, சிறிய அளவிலான மழையும், வழக்கமான காலைப் பனியும் மாவுப்போன்ற சாம்பல் நோய் பரவுவதை துரிதப்படுத்துகிறது.

உயிரியல் கட்டுப்பாடு

தோட்டங்களுக்கு, பால்-நீர் கலவை இயற்கையான பூஞ்சைக் கொல்லியாக செயல்படக்கூடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இலைகளில் இந்தக் கலவையை பயன்படுத்தவும். இந்த வீட்டு உபயோக குறிப்பு வெள்ளரி இனங்கள் (வெள்ளரி, சீமை சுரைக்காய், பூசணி) மற்றும் பெர்ரிகளில் நன்றாக வேலை செய்கிறது. சாம்பல் நோயின் வகைகள் வகைகள் புரவலனுக்கு ஏற்றாற்போல் வேறுபடுகின்றன, இந்தக் கலவை அனைத்து வகைகளுக்கும் பயனுள்ளதாக இருக்காது. எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், பூண்டு அல்லது சோடியம் பைகார்பனேட் கலவைகளைக் கொண்டு முயற்சிக்கவும். வணிக ரீதியில் உயிரியல் சிகிச்சைகளும் கிடைக்கின்றன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மாவுப்போன்ற சாம்பல் நோயால் பாதிக்கப்படக் கூடிய பயிர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், எந்த ஒரு குறிப்பிட்ட இரசாயன சிகிச்சையையும் பரிந்துரைப்பது கடினம். ஈரமாகக் கூடிய சல்பர் (3கி/லி), ஹெக்ஸ்சாகொனாஜொல், ட்ரைஃப்ளூமிஸோல், மைக்ளோபூட்டனில் (அனைத்தும் 2 மிலி/லி) போன்றவகளை அடிப்படையாக கொண்ட பூஞ்சைக் கொல்லிகள், சில பயிர்களில் பூஞ்சை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன.

தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி உள்ள, சகிப்பு தன்மை கொண்ட வகைகளைப் பயன்படுத்தவும்.
  • நல்ல காற்றோட்டத்தைக் கொடுக்கும் வகையில், போதுமான இடைவெளிவிட்டு பயிர்களை நடவும்.
  • நோய் அல்லது நோய்ப்பூச்சி ஏற்படுவதை கண்காணிக்க வயல்களை தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • முதல் புள்ளிகள் தோன்றும்போதே பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றிவிடவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை தொட்ட பிறகு ஆரோக்கியமான தாவரங்களை தொடாதீர்கள்.
  • அடர்ந்த தழைக்கூளத்தின் அடுக்குகள், நிலத்திலிருந்து இலைகளுக்கு வித்துக்கள் பரவுவதைத் தடுக்கும்.
  • சில சமயங்களில், எளிதில் பாதிக்காத பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.
  • சீரான ஊட்டச்சத்து வழங்கும் உரங்களை இடவும்.
  • தீவிர வெப்பநிலை மாற்றங்களைத் தவிர்க்கவும்.
  • அறுவடைக்குப்பின் நன்கு உழுது தாவர குப்பைகளை மண்ணில் ஆழமாக புதைக்கவும் அல்லது அறுவடைக்குப்பின் தாவர குப்பைகளை அகற்றி விடவும்.