தக்காளியின் பின் கருகல் நோய்

 • அறிகுறிகள்

 • தூண்டுதல்

 • உயிரியல் கட்டுப்பாடு

 • இரசாயன கட்டுப்பாடு

 • தடுப்பு முறைகள்

தக்காளியின் பின் கருகல் நோய்

Phytophthora infestans

பூஞ்சைக்காளான்


சுருக்கமாக

 • இலை ஓரங்களில் இருந்து பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்.
 • இலைகளின் அடிப்புறங்கள் வெள்ளை நிறப் பூசணத்தால் சூழப்பட்டிருக்கும்.
 • சாம்பல் அல்லது பழுப்பு நிறச் சுருங்கிய கறைகள் பழங்களில் காணப்படும்.
 • பழச் சதைகள் கடினமாகி மற்றும் பழச்சிதைவு ஏற்படும்.

புரவலன்கள்:

தக்காளி

அறிகுறிகள்

பழுப்பு-பச்சை நிறப் புள்ளிகள் இலை ஓரங்கள் மற்றும் இலையின் மேற்பகுதிகளில் காணப்படும். பின்னர், இலைகளின் பெரும்பகுதிகள் முழுவதும் பழுப்பு நிறமாக மாறும். ஈரமான வானிலையில், இலைகளின் அடிப்புறத்தில் உள்ள சிதைவுகள் சாம்பல் முதல் வெள்ளைப் பூசணங்களால் சூழப்பட்டிருக்கும், இதன்மூலம் ஆரோக்கியமானத் திசுக்களை இறந்த திசுக்களிலிருந்து பிரித்தறிய முடியும். நோய் அதிகரிக்கும்போது, இலைத்திரள்கள் பழுப்பு நிறமாகி, சுருண்டு, உலர்ந்துவிடக்கூடும். சிலவேளைகளில், கூர்மையாகப் பிரிக்கப்பட்ட பழுப்புப் புள்ளிகள் மற்றும் வெள்ளை நிறத்தினால் சூழப்பட்ட அடையாளங்கள் தண்டுகள், காம்புகள் மற்றும் கிளைகளில் காணப்படும். சாம்பல்-பச்சை முதல் அழுக்கு-பழுப்பு நிற மற்றும் சுருங்கிய கறைகள் பழங்களில் காணப்படும். அந்த இடங்களில், பழங்கள் கடினமாகிவிடும்.

தூண்டுதல்

நடுவேனிற்காலத்தில் இந்த நோயின் பாதிப்பு அதிகமிருக்கும். காயங்களின் வழியே பயிருக்குள் பூஞ்சைகள் நுழையும் மற்றும் தோலின் மேற்பகுதியினை உரித்துவிடும். வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்றவை நோய் வளர்ச்சியினை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகள் ஆகும். பின் கருகல் நோயின் பூஞ்சைகள், அதிக ஒப்பு ஈரப்பதம் (சுமார் 90%) மற்றும் வெப்பநிலை 18 – 26 டிகிரி செல்சியஸாக இருக்கும் நிலைகளில் அதிகம் வளரும். சூடான மற்றும் உலர்ந்த கோடைக்கால வானிலையில் இந்நோயின் பரவுதல் நின்றுவிடும்.

உயிரியல் கட்டுப்பாடு

இதுவரையில், பின் கருகல் நோய்க்கு எவ்வித உயிரியல் சிகிச்சை முறைகளும் இல்லை. பாதிக்கப்பட்ட பயிர்களை மற்றும் அதற்கு அருகில் இருக்கும் பயிர்களை உடனடியாக அவ்விடத்தினை விட்டு நீக்கி அழிப்பதன் மூலம் நோயினைப் பரவாமல் தடுக்கலாம் மற்றும் பாதிக்கப்பட்ட பயிர்களைச் சிதைந்த உரங்களாகப் பயன்படுத்தக் கூடாது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். மான்டிப்ரோபமிட், குளோரோதலோனில், ஃப்ளுசினம், மான்கோஸெப் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்ட பூஞ்சைக் கொல்லிகளைத் தெளிப்பான்களாகப் பயன்படுத்தி பின் கருகல் நோயினை எதிர்க்கலாம். மழைக்காலத்தில் அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம் நடைமுறையில் இருக்கும் சமயத்தில் இந்த நோய் ஏற்படும் போது மட்டுமே பூஞ்சைக்கொல்லிகள் பொதுவாகத் தேவைப்படும்.

தடுப்பு முறைகள்

 • ஆரோக்கியமான விதைகளை நம்பகமான விற்பனையாளர்களிடம் இருந்து பெறவும்.
 • நெகிழ்திறன் தன்மை கொண்ட பயிர்களைப் பயிரிடவும்.
 • உருளைக் கிழங்கு மற்றும் தக்காளியினை அடுத்தடுத்து பயிரிடக்கூடாது.
 • நன்கு காற்றோட்டமான பகுதி மற்றும் சிறந்த வடிகால் முறைகளைப் பயன்படுத்தி பயிர்களை உலர்வாக வைத்துக்கொள்ளவும்.
 • தார்ப்பாய் மற்றும் மரத்துண்டுகள் போன்ற எளிமையான ஒளிபுகும் மழைக் காப்பிடங்களை நிறுவுதல் உதவியாக இருக்கும்.
 • சிலிகேட் இருக்கும் பூச்சிக்கொல்லிகளை, குறிப்பாக நாற்றுநடும் நிலையில் பயன்படுத்துவதன் மூலம் பூஞ்சைகளிடம் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
 • பகல்பொழுதின் இறுதியில் நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்கவும் மற்றும் நில அளவிற்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்யவும்.
 • சுகாதாரமான கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தவும்.
 • பொதுவான வலுவுடன் பயிர்கள் வளரப் பயிர் செறிவூட்டிகளைப் பயன்படுத்தவும்.
 • பயிர் சுழற்சியினை இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிற பயிர்களுடன் செய்யவும்.