குடைமிளகாய் & மிளகாய்

மிளகாயின் செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்

Cercospora capsici

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • வெண்மையான மையம், அடர் நிறத்தில் வளையம் மற்றும் மஞ்சள் ஒளிவட்டம் ('தவளை கண்') ஆகியவற்றுடன் பெரிய ஒரே மையத்தை உடைய பழுப்பு நிற புள்ளிகள் இலைகளில் காணப்படும்.
  • புள்ளிகள் பெரிய சிதைவுகளாக பெரிதாகும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாகி, உதிர்ந்து, பழங்களை வெப்பத்தாக்குதலுக்கு உள்ளாக்கும்.

இதிலும் கூடக் காணப்படும்


குடைமிளகாய் & மிளகாய்

அறிகுறிகள்

நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில், இலைகளில் சாம்பல் நிற மையங்கள் மற்றும் சிவப்பு கலந்த பழுப்பு நிற ஓரங்களுடன் பழுப்பு நிற வட்ட புள்ளிகள் தோன்றும். பிற்காலத்தில், இவை வெண்ணிற மையத்தை சுற்றி வளரும் அடர்நிற செறிவுகளை வளையங்களாக 1.5 செ.மீ அளவு வரை பெரிய வட்ட பழுப்பு புள்ளிகளாக உருவாகின்றன. கரடுமுரடான இருண்ட வளையமும் மஞ்சள் ஒளிவட்டமும் புள்ளிகளுக்கு 'தவளை-கண்' தோற்றத்தைக் கொடுக்கும். புள்ளிகள் அதிகமாகும்போது, இவை படிப்படியாக ஒன்றிணைந்து பெரிய இலை சிதைவுகளாக உருவாகுகின்றன. வெள்ளை மையம் பெரும்பாலும் உலர்ந்து, உதிர்ந்து, குண்டடிபட்ட துளைகளை ஏற்படுத்துகிறது. நோய்த்தொற்றின் பிந்தைய கட்டங்களில், இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி அல்லது உதிர்ந்து, பழங்களை வெப்ப தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது. கடுமையான சந்தர்ப்பங்களில், பழத் தண்டு மற்றும் புள்ளி இதழ் ஆகியவற்றிலும் புள்ளிகள் காணப்படுகின்றன, இதன் விளைவாக பெரும்பாலும் தண்டு-அடி அழுகல் ஏற்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

30 நிமிடங்களுக்கு 52 டிகிரி செல்சியஸ் சூடான தண்ணீருடன் விதை சிகிச்சை அளித்தல் விதைகளின் மீதான பூஞ்சைகளை குறைக்கிறது. சிகிச்சையானது விதை முளைத்தலையும் பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். முறையாக மேற்கொள்ளப்படாவிட்டால் (அதிக நேரம் அல்லது வெப்பநிலை) சிகிச்சையானது விதை முளைப்பையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்க. செப்பு ஹைட்ராக்சைடு கொண்ட தயாரிப்புகளை இலைத்திரள்கள் மீது தெளிக்கலாம், இதனை முதல் புள்ளிகள் தென்பட்டவுடனேயே தொடங்கி, கடைசி அறுவடைக்கு 3-4 வாரத்திற்கு முன்பு வரை 10-14 நாட்கள் இடைவெளியில் தொடரலாம். இலைகளின் இருபுறமும் தெளிப்பது முக்கியம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். கேப்டன் (3 கிராம் / கிலோ) உடனான விதை சிகிச்சை நோய்க்கு எதிராக போராட வல்லது. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பிற சிகிச்சைகள், செப்பு ஹைட்ராக்சைடு, குளோரோதலோனில் அல்லது மான்கோசெப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இலைத்திரள் தெளிப்பு தயாரிப்புகள் ஆகியனவாகும். புள்ளிகள் முதலில் தோன்றும்போதே சிகிச்சை தொடங்கப்பட்டு, கடைசி அறுவடைக்கு 3-4 வாரத்திற்கு முன்பு வரை 10-14 நாட்கள் இடைவெளியில் தொடர வேண்டும். இலைகளின் இருபுறமும் தெளிப்பது முக்கியம்.

இது எதனால் ஏற்படுகிறது

அறிகுறிகளானது செர்கோஸ்போரா கேப்சிசி என்ற பூஞ்சையால் ஏற்படுகின்றன, இது வெப்பமண்டலங்களில் குறிப்பாக நிகழக்கூடியது. இது விதை படுக்கைகள் மற்றும் வயல்களில் என இரண்டிலும் உள்ள தாவரங்களை பாதிக்கிறது. இது விதைகளில் அல்லது மண்ணில் மற்றும் பாதிக்கப்பட்ட தாவர எச்சங்களில் உயிர்வாழ்வதன் மூலம் ஒரு பருவத்திலிருந்து இன்னொன்றுக்கு பரவுகிறது. இது நீர், மழை, காற்று மற்றும் இலைகள் ஒன்றன் மீது ஒன்று படுவது, கருவிகள், தொழிலாளர்கள் வழியாகவும் பரவுகிறது. இலைகளின் நேரடி ஊடுருவலால் இலைத்திரள்களில் தொற்று ஏற்படுகிறது மற்றும் நீடித்த இலை ஈரப்பதம் இதற்கு உகந்ததாக இருக்கிறது. சுமார் 23 ° செல்சியஸ் சூடான வெப்பநிலை மற்றும் 77 - 85% வரையிலான அதிகமான ஈரப்பதம் தொற்றுநோய்க்கான உகந்த நிலைமைகள். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், இது குறிப்பாக நோய்த்தொற்று பருவத்தின் தொடக்கத்தில் நடந்தால் விளைச்சலை கணிசமாக பாதிக்கும்.


தடுப்பு முறைகள்

  • ஆரோக்கியமான, சான்றிதழ் பெற்ற விதைகளைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • நல்ல காற்றோட்டத்திற்கும், நீண்டகால இலை ஈரப்பதத்தை தவிர்க்கவும் தாவரங்களுக்கு இடையே பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியை பேணவும்.
  • தாவரத்திற்கும் பூஞ்சைக்கும் இடையில் உடலியல் தடையை உருவாக்க தழைக்கூளம் பயன்படுத்தவும்.
  • தாவரங்கள் நிமிர்ந்து நிற்பதற்கு மரமுளைகளை பயன்படுத்தவும்.
  • இலை ஈரப்பதத்தைக் குறைக்க சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்தவும்.
  • நோயின் ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என விதை படுகைகள், இளம் தாவரங்கள் அல்லது நாற்றுகளைக் கண்காணிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை வயலிலிருந்து அகற்றி, அவற்றை அழிக்கவும்.
  • வயலிலும் அதன் சுற்றுப்பகுதியிலும் உள்ள களைகளை கட்டுப்படுத்தவும்.
  • தாவரங்கள் ஈரமாக இருக்கும்போது வயல்களில் வேலை செய்வதை தவிர்க்கவும்.
  • குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு பரவலான பயிர் சுழற்சியை செயல்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பிறகு தாவர குப்பைகளை அகற்றி அவற்றை அழிக்கவும்.
  • விதைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களில் தண்டு அடி அழுகல் நோய் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க