தக்காளியின் பாக்டீரியா புள்ளி நோய்

 • அறிகுறிகள்

 • தூண்டுதல்

 • உயிரியல் கட்டுப்பாடு

 • இரசாயன கட்டுப்பாடு

 • தடுப்பு முறைகள்

தக்காளியின் பாக்டீரியா புள்ளி நோய்

Xanthomonas spp.

நுண்ணுயிரி


சுருக்கமாக

 • சிறிய, மஞ்சள்-பச்சை நிறப் புண்கள் இளம் இலைகளில் தோன்றும்.
 • இலைகள் சிதையும் மற்றும் முறுக்கிகொள்ளும்.
 • முதிர்ந்த இலைத் திரள்கள் மற்றும் பழங்களில் மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் அடர், நீர் தோய்த்த காயங்கள் காணப்படும்.

புரவலன்கள்:

தக்காளி

அறிகுறிகள்

இந்த பாக்டீரியா தக்காளி செடியின் தாவரம், தண்டுகள் மற்றும் பழங்களைத் தாக்குகிறது. முதல் அறிகுறிகளானது இளம் இலைகளில் காணப்படும் சிறிய, மஞ்சள்-பச்சை நிறப் புண்களாகும், இலைகள் பொதுவாக சிதைந்து காணப்படும் மற்றும் முறுக்கிக் கொண்டிருக்கும். முதிர்ந்த இலை திரள்களில், நரம்புகளால் காயங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, காலப்போக்கில் கோண வடிவிலான தோற்றத்தைப் பெறும். இவை ஆரம்பத்தில் கரும் பச்சை நிறத்தில், பிசுக்கு போன்ற தோற்றத்துடன் காணப்படும், இவை பெரும்பாலும் மஞ்சள் நிற ஒளிவட்டங்களால் சூழப்பட்டிருக்கும். இவை பொதுவாக இலை ஓரங்கள் அல்லது நுனிகளில் அதிக அளவில் காணப்படும். தகுந்த சூழல்கள் நிலவினால், இவை 0.25 முதல் 0.5 செமீ அளவிற்கு விரைவாக பெரிதாகும் மற்றும் இளம் பழுப்பு முதல் பழுத்த- சிவப்பு நிறமாக மாறும். இறுதியில், இலைகளில் புள்ளிகள் குண்டடிபட்ட துளைகள் போன்று காட்சியளிக்கும், ஏனெனில் மையப்பகுதி உலர்ந்து மற்றும் சிதைந்துவிடும். பழங்களில் காணப்படும் புள்ளிகள் (0.5 செ.மீ. வரை) மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன், ஆரம்பத்தில் இளம் பச்சை நிற, நீர் தோய்த்த பகுதிகளாக உருவாகி, இறுதியில் கடினமாகி, பழுப்பு நிறமாகி மற்றும் சுருங்கி விடக்கூடும்.

தூண்டுதல்

பாக்டீரியா இலைப் புள்ளி நோய் சாந்தோமோனாஸ் பேரினத்தின் பல்வேறு வகையான பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இது உலகளவில் ஏற்படுகிறது மற்றும் வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழலில் வளர்க்கப்படும் தக்காளிச் செடிகளுக்கு மிகவும் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாகும். நோய்க் கிருமிகள் விதைகளின் உள்ளே அல்லது வெளியே, தாவரக் கழிவுகள் மற்றும் சில குறிப்பிட்ட களைகளில் வாழும். இது மண்ணில் சில நாட்கள் முதல் வாரங்கள் வரையிலான குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ளது. நிலைமைகள் சாதகமானதாக இருக்கும் போது, இது மழை அல்லது மேல்நிலை நீர்ப்பாசனம் மூலம் ஆரோக்கியமான தாவரங்களுக்குப் பரவுகிறது. இது இலைத்துளைகள் மற்றும் காயங்கள் மூலம் தாவரத் திசுக்களினுள் நுழைகிறது. இதற்கு உகந்த அதிகபட்ச வெப்பநிலை 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையாகும். பயிர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டால், இதனைக் கட்டுப்படுத்துவது கடினம், மற்றும் மொத்தப் பயிர் இழப்புகளுக்கும் வழிவகுக்கும்.

உயிரியல் கட்டுப்பாடு

பாக்டீரியா புள்ளி நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கும் மிகவும் செலவாகும். பருவத்தின் ஆரம்பத்திலேயே இந்த நோய் ஏற்பட்டால், முழுப் பயிர்களையும் அழித்து விடுவது குறித்து கருதுங்கள். செம்பினைக் கொண்ட பாக்டீரியக் கொல்லிகள் இலைத்திரள்கள் மற்றும் பழங்களுக்குப் பாதுகாப்பை அளிக்கின்றன. குறிப்பாக பாக்டீரியாவைக் கொல்லும் பாக்டீரியா வைரஸ்கள் (பாக்டீரிய உண்ணிகள்) கிடைக்கின்றன. 1.3% சோடியம் ஹைபோகுளோரைட்டில் ஓர் நிமிடம் அல்லது சூடான நீரில் (50 டிகிரி செல்ஸியஸ்) 25 நிமிடங்கள் விதைகளை ஊற வைத்தல் நோயின் தாக்கத்தைக் குறைக்கக்கூடும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்க பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். செம்பைக் கொண்ட பாக்டீரியா கொல்லிகளைப் பாதுகாப்பானாகப் பயன்படுத்தலாம், இது இந்த நோயை ஓரளவு கட்டுப்படுத்தும். இந்த நோயின் முதல் அறிகுறி தென்பட்டவுடன் பயன்படுத்தலாம், பின்னர் வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழல் நிலவும் போது 10 முதல் 14 நாள் இடைவெளியிலும் பயன்படுத்தலாம். செம்புக்கு எதிரான எதிர்ப்புத் திறன் அடிக்கடி உருவாகுவதால், மான்கோஜெபுடன் செம்பினைக் கொண்ட பாக்டீரியக் கொல்லி கலவைகளும் பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பு முறைகள்

 • சான்றளிக்கப்பட்ட நோய் இல்லாத விதைகளை நடவு செய்யவும்.
 • நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தாவர வகைகளைப் பயன்படுத்தவும்.
 • இலைப் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட நாற்றங்காலைக் கண்காணித்து, அகற்றி மற்றும் அழித்துவிடவும்.
 • வயல்களில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள களைகளை அகற்றவும்.
 • மண்ணின் மூலம் தாவர மாசுபாட்டினைத் தவிர்க்க மண்ணில் தழைக்கூளங்களைக் கொண்டு மூடவும்.
 • கருவிகள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்யவும்.
 • இலைத் திரள்கள் ஈரமாக இருக்கும் போது, மேல்நிலை நீர்ப்பாசனம் மற்றும் வயல்களில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.
 • அறுவடைக்குப் பின்னர் தாவரக் குப்பைகளை உழுது புதைத்து விடவும் அல்லது அகற்றி விடவும்.
 • அறுவடைக்குப்பின் மண்ணை சூரிய ஒளியில் காய வைப்பதற்குத் திட்டமிடுங்கள்.
 • 2-3 ஆண்டுகளுக்கு பயிர் சுழற்சி செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.