அகண்ட சிலந்திப்பேன்

 • அறிகுறிகள்

 • தூண்டுதல்

 • உயிரியல் கட்டுப்பாடு

 • இரசாயன கட்டுப்பாடு

 • தடுப்பு முறைகள்

அகண்ட சிலந்திப்பேன்

Polyphagotarsonemus latus

சிலந்திப்பேன்


சுருக்கமாக

 • இலைகள், இலை மொட்டுகள், பூ மொட்டுகள் மற்றும் பழங்களில் உருக்குலைவு மற்றும் நிறமாற்றம் போன்றவை காணப்படும்.
 • குன்றிய வளர்ச்சி மற்றும் தளிர்கள் பின்புறமாக கருகிப்போகுதல் போன்றவை ஏற்படும்.

புரவலன்கள்:

விதையவரை

குடைமிளகாய் & மிளகாய்

இதர

பப்பாளி

அறிகுறிகள்

இதன் சேதங்களானது களைக்கொல்லிகளின் தவறான பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக ஏற்படும் சேதங்களோடு ஒத்திருக்கும். இலைகள் சுருண்டு, தடிமனாகி, பழுப்பு நிறமாகும். அடிப்புறத்தில் மைய நரம்புகளுக்கு இடையில் தக்கை போன்ற பழுப்பு நிறப் பகுதிகள் தோன்றும். பூக்கள் உதிர்ந்து, இளம் இலைத்திரள்கள் பெரும்பாலும் உருக்குலைந்துபோகும். எண்ணிக்கை அடர்த்தியாக இருக்கும்போது, குன்றிய வளர்ச்சி மற்றும் தளிர்கள் பின்புறமாக கருகுதல் போன்றவை காணப்படும். சிலந்திப்பேன்களின் உண்ணும் சேதங்களானது பழங்கள் வெள்ளி நிறமாகுதல் மற்றும் தக்கை போன்ற பழுப்பு நிறப் பகுதிகள் உருவாகுதல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

தூண்டுதல்

அகண்ட சிலந்திப்பேன்கள் இளம் இலைகள் மற்றும் மொட்டுகளைத் துளைத்து, அந்த காயங்களில் இருந்து வடியும் சாறுகளை உறிஞ்சும். இவற்றின் உமிழ்நீரில் தாவர-சுரப்பி-போன்ற பொருட்கள் உள்ளன, இது திசு உருக்குலைவுகளை ஏற்படுத்தும். இந்த சிலந்திப்பேன்கள் மிகவும் சிறியவை, இவற்றைக் கை பூதக்கண்ணாடி இல்லாமல் பார்ப்பது கடினம். முதிர்ந்த பூச்சிகள் 0.2 மிமீ நீளத்தில் முட்டை வடிவத்தில் இருக்கும்.இவற்றின் நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திற்கு இடையில் இருக்கும். முதிர்ந்த பெண் சிலந்திப்பேன்கள் ஒரு நாளைக்கு ஐந்து முட்டைகளை இலைகளின் அடிப்புறத்தில் அல்லது பழங்கள் சாய்ந்து இருக்கும் பகுதிக்கு அடியில் இடும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் முட்டைப்புழுக்கள் வெளியாகும். பூச்சிகளை இவை பரப்பும் காரணியாக பயன்படுத்தாதவரை அல்லது காற்று மூலம் பரவாத வரை இந்த சிலந்திப்பேன்கள் மிகவும் மெதுவாகவே பரவும். இந்த இனங்கள் கண்ணாடிக் கூடியில் இருக்கும் வெதுவெதுப்பான ஈரமான நிலைகளில் வாழும்.

உயிரியல் கட்டுப்பாடு

நியோசியூலஸ் குக்குமேரிஸ் மற்றும் ஆம்ப்லிசியஸ் மாண்ட்டோரென்சிஸ் போன்ற அகண்ட சிலந்திப்பேனின் இயற்கை இரைப்பிடித்துண்ணிகளை நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு அவற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். பூண்டுச்சாறு மற்றும் பூச்சிக்கொல்லி சோப்புத் தண்ணீரைத் தெளித்து முயற்சிக்கவும். இளம் செடிகளுக்கு வெப்ப நீர் சிகிச்சை அளிப்பதும் (43 ° முதல் 49 டிகிரி செல்ஸியஸ் வரை 15 நிமிடங்கள்) சிலந்திப்பேன் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உதவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோய்ப்பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் மட்டும் இரசாயனங்களைப் பயன்படுத்தவும். சிலந்திப்பேனின் குறுகிய வாழ்க்கைச் சுழற்சி, இரசாயங்களுக்கான எதிர்ப்புத் திறனை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளதால், இரசாயனங்களைப் பயன்படுத்தி இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். சிலந்திப் பேன்கொல்லிகள் நிஜமாகவே தேவைப்பட்டால், அபாமெக்டின், ஸ்பைரோமெசிஃபென் அல்லது பைரைடின் ஆகியவற்றைக் கொண்ட தயாரிப்புகளைத் தெளிக்கலாம்.

தடுப்பு முறைகள்

 • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அருகே காற்று கீழ்நோக்கி இருக்கும் பகுதியில் நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
 • பாதிக்கப்பட்ட வயல்களுக்கு அருகே ஆரோக்கியமான பயிர்களை நடவு செய்வதைத் தவிர்க்கவும்.
 • பரவுவதைத் தவிர்க்க, அறிகுறிகள் தென்படும் தாவரங்களையும், அவற்றுக்கு அருகில் இருக்கும் தாவரங்களையும் அகற்றவும்.
 • பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் இயற்கை இரைப்பிடித்துண்ணிகளை ஆதரிக்கவும்.
 • எறும்பை எதிர்க்கும் பொறிகளைத் தாவரங்களில் பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவும்.
 • அறுவடைக்குப்பின் தாவரக் கழிவுகளை அகற்றி, அழித்துவிடவும்.
 • மேலும் பிற பயிர்களை நடவு செய்வதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு வாரம் காத்திருக்கவும்.