வெள்ளி இலை வெள்ளை ஈ

 • அறிகுறிகள்

 • தூண்டுதல்

 • உயிரியல் கட்டுப்பாடு

 • இரசாயன கட்டுப்பாடு

 • தடுப்பு முறைகள்

வெள்ளி இலை வெள்ளை ஈ

Aleyrodidae

பூச்சி


சுருக்கமாக

 • சிறிய வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பகுதியில் உட்காரும், தாவரங்களை அசைப்பதன் மூலம் பிற பகுதிகளுக்கு பரவும்.
 • இலை பரப்புகளில் வெளிறிய புள்ளிகள் காணப்படும்.
 • இந்த புள்ளிகள் பின்னர் இணைந்து, நரம்புகளை சுற்றியுள்ள பகுதியைத் தவிர, இலைகள் இறுதியில் மஞ்சள் நிறமாக மாறும்.
 • இலைகள் பிறகு சுருண்டு, கப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும்.

புரவலன்கள்:

விதையவரை

குடைமிளகாய் & மிளகாய்

கத்திரிக்காய் செடி

சேலாப்பழம்/செர்ரி

வெள்ளரிக்காய்

பூசணிக்காய்

சீமை சுரைக்காய்

தக்காளி

முட்டைக்கோசு

பச்சடிக்கீரை

உருளைக் கிழங்கு

உளுந்து & பச்சை பயிறு

பட்டாணி மற்றும் துவரம் பருப்பு

கொண்டைக் கடலை & பருப்பு வகைகள்

பருத்தி

சோயாமொச்சை

இதர

வெங்காயம்

சோளம்

மக்காச்சோளம்

செம்புற்றுப்பழம்

வாழைப் பழம்

நாரத்தை / சாற்றுக்கனி வகைகள்

நிலக்கடலை

மரவள்ளிக்கிழங்கு

கரும்பு

முலாம்பழம்

பருப்பு வகை

பூக்கோசு.

அலங்காரச் செடி வகை

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் தாவரத்தின் மென்மையான பகுதியை உறிஞ்சி, இலை பரப்புகளில் வெளிறிய புள்ளிகளை ஏற்படுத்தும். இந்த புள்ளிகள் பின்னர் தேன்துளியால் உரு சிதைந்து, அங்கு கரும்பூசணம் வளரும். கடுமையான தொற்றுநோய்களில், இந்தப் புள்ளிகள் ஒருங்கிணைந்து, முழு இலைகளிலும் படரும். இது இறுதியில் நரம்புகளைச் சுற்றியுள்ள பகுதியைத் தவிர மற்றவை மஞ்சள் நிறமாக மாறும். இலைகள் பின்னர் சிதைந்து, சுருண்டு, கப் போன்ற வடிவத்தில் காணப்படும். வெள்ளி இலை வெள்ளை ஈக்கள் தக்காளி மஞ்சள் இலை சுருள் வைரஸ் அல்லது மரவள்ளிக்கிழங்கு பழுப்பு கோடு வைரஸ் போன்ற வைரஸ்களை பரப்பும்.

தூண்டுதல்

வெள்ளி இலை வெள்ளை ஈக்கள் 0.8 மிமீ நீளம் கொண்டிருக்கும், மற்றும் அவற்றின் உடல் மற்றும் இரண்டு ஜோடி இறக்கைகள் வெள்ளை முதல் மஞ்சள் நிற தூளான, மெழுகு சுரப்புகளுடன் காணப்படும். அவை பெரும்பாலும் இலைகளின் கீழ்ப்பகுதியில் காணப்படுகின்றன, அங்குதான் பெண் பூச்சிகள் முட்டைகளை இடுகின்றன. பின்னர் வெறும் கண்களால் காணக்கூடிய சிறிய, மஞ்சள் முதல் வெள்ளை முட்டைப்புழு செதில்கள் பின்னர் தோன்றும். கடுமையான நோய்தொற்றின்போது, தாவரத்தை அசைக்கும் போது, எண்ணற்ற, சிறிய, வெள்ளை நிற முதிர்ந்த வெள்ளை ஈக்கள் பறக்கும். தாவரங்களுக்கு இடையில், முதிர்ந்த பூச்சிகள் மாற்று புரவலன் தாவரங்களில் வாழ்கின்றன.

உயிரியல் கட்டுப்பாடு

சர்க்கரை-ஆப்பிள் எண்ணெய் (அனோனா ஸ்குவாமோசா) அடிப்படையிலான இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பயன்படுத்தவும். ஒட்டுண்ணி குளவி எரித்மோசிரஸ் எரேமிகஸ், இறைப்பிடித்துண்ணும் பேன்கள் அல்லது நிமடோட்ஸ் போன்ற எதிரிகளை வயல்களில் வளர்த்து, அவற்றை ஊக்குவிக்கவும். பூச்சியைக் கட்டுப்படுத்த / அழிக்க நோயாக்க பூஞ்சை பயன்படுத்தப்படுகிறது.  முட்டைப்புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகளின் பாதுகாப்பு மெழுகுகளைச் சமாளிப்பதன் மூலம் பரப்பு இழுவிசைக் குறைப்பி போன்ற பண்புகளைக் கொண்ட சுற்றுச்சூழலை ஆதரிக்கும் பூச்சிக்கொல்லிகளின் புதிய குழு, பூச்சிகளை அழிக்கிறது.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வெள்ளி இலை வெள்ளை ஈக்கள் விரைவாக அனைத்து பூச்சிக்கொல்லிகளுக்கும் எதிர்ப்பு திறனை உருவாக்குகிறது, எனவே பல்வேறு தயாரிப்புகளை சுழற்சி முறையில் உபயோகிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. வேறு மாற்று சிகிச்சைகள் கிடைக்கவில்லை என்றால், பூச்சிகளைக் கட்டுப்படுத்த பைஃபென்திரின், புப்ரோபெஜின், ஃபெனோக்சிகார்ப், டெல்டெமெத்ரின், அசாதிராச்டின், பைமெட்ரோஜின் அல்லது ஸ்பிரோமெசிஃபென் ஆகியவற்றின் அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகளின் கலவையைப் பயன்படுத்தவும்.

தடுப்பு முறைகள்

 • புரவலன் அல்லாத பயிர்களுடன் ஊடுபயிர் முறையை மேற்கொள்ளவும்.
 • தாவரங்களில், குறிப்பாக இளம் தளிர்களில் வெள்ளை ஈக்கள் தென்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கவும்.
 • முட்டைகள் அல்லது முட்டைப்புழுக்கள் காணப்படும் இலைகளை அகற்றவும்.
 • அதிகளவிலான பூச்சிக்களைப் பிடிக்க ஒட்டும் தன்மை கொண்ட பொறிகளை பயன்படுத்தவும்.