தக்காளியின் பேக்டீரியா புள்ளி நோய்

 • அறிகுறிகள்

 • தூண்டுதல்

 • உயிரியல் கட்டுப்பாடு

 • இரசாயன கட்டுப்பாடு

 • தடுப்பு முறைகள்

தக்காளியின் பேக்டீரியா புள்ளி நோய்

Pseudomonas syringae pv. tomato

நுண்ணுயிரி


சுருக்கமாக

 • மஞ்சள் நிற வளையத்துடன் கூடிய அடர் பழுப்பு முதல் கருப்புப் புள்ளிகள், இலைகள், தண்டு மற்றும் பூக்களின் தண்டுகளில் காணப்படும்.
 • ஒன்றன் மீது ஒன்றாக உருவாகும் புள்ளிகள் ஒழுங்கற்ற கறைகளை இலைகளின் மீது ஏற்படுத்தும்.
 • சிறிய, மேலோட்டமாக, வளர்ந்த கருப்புப் புள்ளிகள் கனிகளில் காணப்படும்.

புரவலன்கள்:

தக்காளி

அறிகுறிகள்

பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாக்டீரியாக்கள் தாக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. இலைகள் மற்றும் கனிகளில் இதன் அறிகுறிகள் காணப்படும் மற்றும் இந்த அறிகுறிகளை குறுகலான மஞ்சள் நிற ஒளிவட்டங்களுடன் சிறிய, வட்டமான, கருப்பு நிறப் புள்ளிகள் இருப்பதைக் கொண்டு அறியலாம். இந்தப் புள்ளிகள் சிதறியிருக்கும் மற்றும் சிறியதாக இருக்கும், ஆனால் மோசமான பாதிப்புகளில் இவை ஒன்றுசேரும் அல்லது ஒன்றன் மீது ஒன்றாகி பெரிய மற்றும் ஒழுங்கற்றக் கறைகளை ஏற்படுத்தும். இவை இலைகளின் நரம்புகளுடன் திரட்டுக்களாக அல்லது இலைகளின் நுனி வரை பரவுவதால், சுருண்ட அமைப்பினை உருவாக்கும். பழங்களில், மிகவும் சிறிய, சற்று உப்பிய, கருப்புப் புள்ளிகள் உருவாகும், ஆனால் மேலோட்டமான திசுக்களை மட்டுமே இது பாதிக்கும். சிறிய கனி பாதிக்கப்படும்போது, இந்தக் கோடுகள் பள்ளத்தினை உருவாக்கும். அதிகப்படியான நோய்த்தொற்றின்போது, பாதிக்கப்பட்ட தாவரங்களின் வளர்ச்சி குன்றும், மற்றும் பழங்கள் முதிர்ச்சியடைவது தாமதமாகும்.

தூண்டுதல்

ப்சுயூடோமோனாஸ் சிரிஞ்சி பிவி. தக்காளி எனும் பாக்டீரியாவினால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன, இவை மண், பாதிக்கப்பட்ட பயிரின் எஞ்சிய பாகங்கள் மற்றும் விதைகளில் உயிர்வாழக் கூடியவை. பாதிக்கப்பட்ட விதைகளை நடவு செய்ய பயன்படுத்துவது இதன் முதன்மை நோய்க்காரணியின் மூலமாகும், ஏனெனில், பாக்டீரியாக்கள் வளரும் பயிரில் குடியேற்றம் அமைத்து முழுவதும் பாதிக்கும். இவை தக்காளிப் பயிரின் இலைகள் மற்றும் கனிகள் இரண்டையும் பாதிக்கும். இலைகள் மற்றும் கனிகளில் வளரும் பாக்டீரியாக்கள் இரண்டாம் நிலை நோய்க்காரணிகள் ஆகும், இவை பின்னர் மழைச் சாரல் மற்றும் குளிர்ந்த ஈரமான காலநிலைகளில் பாதிக்கப்பட்ட பயிரிலிருந்து ஆரோக்கியமான பயிருக்கு பரவும். மோசமான நோய்த்தாக்கம் அடிக்கடி நிகழாத ஒன்று, மற்றும் நீண்ட இலை ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த வெப்பநிலை ஆகியவை பாக்டீரியாக்கள் பரவ சாதகமானவை ஆகும். தவறான வேளாண் நடைமுறைகளும் பாக்டீரியாக்களை புரவலன் செடிகளுக்கு இடையே பரப்ப உதவுகின்றன.

உயிரியல் கட்டுப்பாடு

20% பிளீச் கரைசலில் 30 நிமிடங்கள் விதைகளை மூழ்கவைத்து விதை சிகிச்சை செய்து பாக்டீரியாவின் தாக்கத்தினைக் குறைக்கலாம். இவை விதைகளின் முளைப்பு விகிதத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், விதைகளை 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலுள்ள நீரில் 20 நிமிடங்கள் மூழ்கவைத்தும் சிகிச்சையளிக்கலாம். விதைகளை அறுவடை செய்யும்போது, விதைகள் நொதித்து தக்காளிப் பசை கிடைக்க சுமார் ஒரு வார காலம் வரை அனுமதித்து, நோய்க்காரணிகளை அழிக்கவும். இது மற்றொரு சிகிச்சை முறையாகும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். நோயின் முதல் அறிகுறி தென்பட்டவுடன், காப்பர் கலந்த பாக்டீரியாக் கொல்லிகளை தடுப்பதற்காகப் பயன்படுத்துவதன் மூலம், பாதியளவு நோயினைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ந்த, மழைக்காலம் மற்றும் ஈரமான சூழல்கள் நிலவும்போது தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையை அளிக்கவும். காப்பருக்கான எதிர்ப்புத் திறனை உருவாக்குவது அடிக்கடி ஏற்படுவதால், காப்பரை அடிப்படையாகக் கொண்ட பாக்டீரியக் கொல்லிகளுடன் மான்கோசெப்பினை இணைத்துப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பு முறைகள்

 • ஆரோக்கியமான மற்றும் சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவும்.
 • உங்கள் பகுதிகளில் தடுப்பு வகைப் பயிர்கள் கிடைத்தால் அவற்றைப் பயன்படுத்தவும்.
 • உற்பத்தி செய்யவிருக்கும் நிலத்தில் இருந்து சற்று தொலைவில் நாற்றுப்பண்ணைகளை அமைக்கவும்.
 • அறுவடைக்குப்பிறகு, விளைநிலங்களில் களைகள் மற்றும் தானே வளரும் தக்காளித் தாவரங்கள் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
 • பயிர்கள் ஈரமாக இருக்கும்போது களப்பணிகளைத் தவிர்க்கவும்.
 • நாற்று நடும்போது, அல்லது கையாளும்போது ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும்.
 • பயிர்களுக்கு இடையே போதுமான இடைவெளிவிட்டு இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் மற்றும் சிறிய கம்புகளைப் பயன்படுத்தி பயிர்கள் நேராக நிற்பதற்கு உதவுங்கள்.
 • தெளித்தல் முறையில் நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்கவும் மற்றும் கீழ்ப்பகுதிகளில் இருந்து தாவரங்களுக்குத் தண்ணீர் ஊற்றவும்.
 • இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பயிர்சுழற்சியினை மேற்கொள்ளவும்.