உருளைக் கிழங்கு

சாம்பல் சுண்டு நோய்

Spongospora subterranea

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • அடர் வித்து பொருட்களை உடைய கொப்புளங்கள்.
  • இவை வெடித்து, தக்கை போன்ற பிளவுகளை ஏற்படுத்தும்.
  • சிதைவுகள் உள்புறம் விரிவடைந்து, ஆழமான குழிகளை ஏற்படுத்தும்.
  • உருளைக்கிழங்குகள் உருக்குலைந்து போகும்.

இதிலும் கூடக் காணப்படும்


உருளைக் கிழங்கு

அறிகுறிகள்

நிலத்திற்கு மேற்புறத்தில் எவ்வித நோய் அறிகுறியும் தோன்றாது. உருளைக் கிழங்குகளின் ஆரம்பநிலை அறிகுறிகள், சிறிய பழுப்பு – ஊதா கொப்புளங்கள் தோன்றி மெதுவாக விரிவடையும். பின்னர் அவை வெடித்து, உருளைக் கிழங்குகளின் மேற்பரப்பினை பாதிக்கும். கிழங்குகளின் மேற்பரப்பில் அடர் பழுப்பு நிறத்தில் நுண்துகள்களை உருவாக்கும். தக்கை போன்ற பொருக்கு என்றழைக்கப்படும் அதிக ஆழமற்ற பிளவுகள் காணப்படும். அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட மண்ணில் சிதைவுகள் உள்நோக்கி விரிவடையும், ஆழமான துளைகளை உருவாக்கும் மற்றும் உட்புற திசுக்களை அழிக்கும். வீக்கம் மற்றும் கட்டிகள் கொண்ட உருளைக் கிழங்குகள் உருவாகுவதால், அவற்றினை சந்தைப்படுத்துதல் கடினம். இந்த முரண்பாடுகள் உருளைக் கிழங்குகளின் சேமிப்பு காலத்திலும் வளரும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்க்கிருமிக்கு எதிரான மாற்று சிகிச்சை எதுவும் கிடைக்கவில்லை, எனவே தடுப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவும். மெட்டம் சோடியம் அல்லது ஃபுளுயசினம் போன்றவற்றின் மூலம் முன்னரே மண்ணிற்கு சிகிச்சையளிப்பது சில நேரங்களில் நன்கு பயனளிக்கும், ஆனால் பெரும்பாலும் இவை சுற்றுசூழல் நிலைமையை பொறுத்து இருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

மண் வழியே பரவும் நோய்க் காரணிகளால் இந்நோய் உருவாகிறது, இந்நோய்க் காரணி சுமார் 6 ஆண்டுகள் வரை மண்ணில் உயிருடன் வாழும். குளிர்ந்த வெப்பநிலையில் (12 – 18 டிகிரி செல்சியஸ்) ஏற்படும் பொதுவான நோய்களுள் இதுவும் ஒன்று. அத்துடன் கனமான மற்றும் அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நீர்த்தேக்கம் ஏற்படும்போதும் இந்நோய் பாதிக்கும். மாறி மாறி வரும் ஈரப்பதமான மற்றும் உலர் வெப்பநிலைகளும் இந்நோய் வளர்ச்சிக்கு ஏதுவானதாக அமையும். பாதிக்கப்பட்ட விதைக் கிழங்குகள், துணிகள், கருவிகள் மற்றும் உரங்கள் கூட நோய்க்கிருமிகளை பரப்பும். பட்டைத் துளைகள், கிழங்குகளின் கண்கள் அல்லது காயங்கள் வழியே நோய் தொற்று துவங்குகிறது. பழுப்பு நிற கிழங்கு வகைகள் குறைந்தளவு சேதத்திற்கான அறிகுறிகளுடன் காணப்படும். இந்நோய் சோலனேசிய குடும்பத்தின் பல உறுப்பினர்களை பாதிக்கும், எடுத்துக்காட்டாக தக்காளி.


தடுப்பு முறைகள்

  • விதை விற்பனையாளரிடம் நெகிழ்வுத் திறன் கொண்ட விதைகளை தேர்ந்தெடுக்க கூறவும்.
  • சான்றளிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட ஆரோக்கியமான விதைப்பு பொருட்களை பயன்படுத்தவும்.
  • சிறந்த பயிர் மறு சுழற்சியினைக் கையாளவும்.
  • நன்றாக உலர்ந்த மண்ணில் பயிரிடவும், அத்துடன் நீர்த்தேக்கம் ஏற்படாத வகையில் கண்காணிக்கவும்.
  • களத்தில் மற்றும் களத்தினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கிழங்குவகைகளின் மாற்று புரவலன்களை கண்காணித்து அவற்றினை நீக்கவும்.
  • மண்ணின் ஹைட்ரஜன் அயனிச்செறிவினைக் கட்டுப்படுத்த சல்ஃபரை பயன்படுத்தவும்.
  • கருவிகள், துணிகள் மற்றும் இயந்திரங்களில் நோய் தொற்று ஏற்படாதவாறு சுத்தமானதாகப் பயன்படுத்தவும்.
  • சாம்பல் சுண்டு நோய் ஏற்பட்ட உருளைக்கிழங்கை உண்ட விலங்குகளில் இருந்து பெறப்பட்ட உரங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • நன்கு ஆழமாக உழுது, மண்ணின் அடிப்பகுதியினை வெளிக்கொணர்ந்து சூரிய ஒளியில் காயவிடவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க