வாழைப் பழம்

சிகார் (சுருட்டு) நுனி அழுகல்

Trachysphaera fructigena

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பழத்தின் நுனிகளில், வறண்ட, சாம்பல் நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரையிலான அழுகல் உருவாகிறது.
  • பாதிக்கப்பட்ட பகுதிகள் சாம்பல் நிற பூஞ்சைகளின் வளர்ச்சியால் மூடப்பட்டிருக்கும்.
  • அது ஒரு சுருட்டின் எரிந்த நுனி போல் தோன்றும்.
  • சேமித்து வைக்கும் போதும், போக்குவரத்தின்போதும் நோய் முழு பழத்தையும் சூழ்ந்துவிடக்கூடும்.
  • பழங்கள் ஒரு அசாதாரண வடிவம் கொண்டிருக்கும், பூஞ்சை மேற்பரப்பில் வெளிப்படையாகத் தோன்றி, சிதைவுகளின் தோலில் தெளிவாகத் தெரியும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

வாழைப் பழம்

அறிகுறிகள்

பழங்களின் நுனிகளில் ஒரு உலர்ந்த, சாம்பல் நிற அழுகலை உருவாக்குவதே இந்த நோயின் இயல்பாகும். பூஞ்சைகளின் வளர்ச்சி உண்மையில் பூக்கும் நிலையிலேயே தொடங்கி பழங்கள் பழுப்பதை பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகள் சாம்பல் நிற பூஞ்சை வளர்ச்சியால் மூடப்பட்டிருக்கும். அது ஒரு எரிந்த சுருட்டின் நுனியில் இருக்கும் சாம்பல் போலத் தோற்றமளிக்கிறது என்பதால் தான் இந்தப் பொதுப் பெயர் பெற்றது. சேமிப்பின்போதோ, போக்குவரத்தின்போதோ, முழு பழத்தையும் சூழும் அளவுக்கு நோய் முன்னேறக்கூடும், அதன் விளைவாக "மம்மிஃபிகேஷன்" (இறந்த உடலைப் பதனப்படுத்தும் முறை போல) நேர்கிறது. பழங்கள் ஒரு அசாதாரண வடிவத்தைக் கொண்டிருக்கும், பூஞ்சை மேற்பரப்பில் வெளிப்படையாகத் தெரிந்து, சிதைவுகள் தோலில் தெளிவாகப் புலப்படும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

பூஞ்சையைக் கட்டுப்படுத்த, சமையல் சோடாவை அடிப்படையாகக் கொண்ட தெளிப்புகளை உபயோகப்படுத்தலாம். இந்த தெளிப்பை தயார் செய்ய, 2 லிட்டர் தண்ணீரில் 50 கிராம் சோப்பையும் , 100 கிராம் சமையல் சோடாவையும் கலக்கவும். நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட கிளைகள் மீதும், அருகிலுள்ள கிளைகள் மீதும், இந்தக் கலவையை தெளிக்கவும். இது விரல்களின் மேற்பரப்பின் pH அளவுகளை அதிகரித்து பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. காப்பர் சார்ந்த பூஞ்சைத் தெளிப்புகளும் பயனுள்ளவையாக இருக்கலாம்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். வழக்கமாக இந்த நோய் குறைந்த முக்கியத்துவமே கொண்டதாகும். அதற்கு எப்போதாவது தான் இரசாயனக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட குலைகளில் மான்கோசெப், ட்ரையோஃபானேட் மெதில் அல்லது மெடாலக்ஸில் ஆகியவற்றை ஒரு முறை தெளித்து பின்னர் பிளாஸ்டிக் உறையால் மூடிவிடலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

சிகார் நுனி அழுகல் என்பது ட்ராகிஸ்ஃபேரா ஃப்ருக்டிஜீனா என்னும் பூஞ்சையாலோ, சில சமயம் மற்றுமொரு பூஞ்சையாலோ (வெர்டிசிலியம் தியோப்ரோமே) ஏற்படும் வாழை நோயாகும். இது காற்றின் மூலமோ மழைச் சாரலின் மூலமோ ஆரோக்கியமான திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மழைக்காலத்தில் இந்தப் பூஞ்சை வாழையைப் பூக்கும் நிலையில் தாக்குகிறது. இது பூவின் வழியாக வாழையைப் பாதிக்கிறது. அங்கு இருந்து, அது பின்னர் பழத்தின் நுனி வரை பரவி, சுருட்டின் சாம்பல் போன்ற ஒரு உலர்ந்த அழுகலை ஏற்படுத்துகிறது, அதனால் தான் இந்தப் பொதுப் பெயர் ஏற்பட்டது. பழுக்கும் ஆரம்ப நிலைகளிலும், சூடான ஈரமான சூழல்களிலும், குறிப்பாக அதிக உயரமான இடங்களில் மற்றும் நிழலில் பயிரிடப்பட்ட பகுதிகளிலும், இந்த நோய்த் தொற்று பொதுவானதாகும்.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத்தன்மை வாய்ந்த வகைகள் கிடைத்தால், அவற்றைப் பயன்படுத்தவும்.
  • நன்கு காற்றோட்டமான விதானத்துடன் தாவரங்களை பராமரிக்கவும்.
  • வயல் வேலை செய்யும்போது தாவரத் திசுக்களை சேதப்படுத்தாதீர்கள்.
  • நோய் ஏற்படுவதைக் குறைக்க, கையாளும் போதும், சேமித்து வைக்கும் போதும் கருவிகளையும், சேமிப்பு வசதிகளையும் நன்றாகச் சுத்தம் செய்யவும்.
  • மழைக்காலத்தில் வாழைப் பழங்களை பாதுகாப்பதற்கு பிளாஸ்டிக் உறையைப் பயன்படுத்தவும்.
  • விதானத்தில் ஈரப்பதத்தைக் குறைப்பதற்கு வாழை இலைகளை வெட்டிப் பராமரிக்கவும்.
  • குலை உருவான பின் பூவின் மிச்சங்கள் அனைத்தையும் அகற்றிவிடவும்.
  • பட்டுப் போன அல்லது பட்டுப் போய்க் கொண்டிருக்கும் இலைகள் அனைத்தையும், குறிப்பாக மழைக்காலத்தில் அகற்றிவிடவும்.
  • நோய்த்தொற்று ஏற்பட்ட தாவர பகுதிகளை எரித்துவிடவும் அல்லது வாழை பயிரிடப்படாத வயல்களில் அவற்றைப் புதைத்துவிடவும்.
  • நோய் ஏற்படுவதைக் குறைக்க குளிர்ச்சியான (14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்விக்கும் வகையில்) உலர்ந்த இடங்களில் சேமித்து வைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க