பிளான்டிக்ஸ் பூச்சித்தடப் பொறி

இந்தியாவில் விழு படைப்பபுழுக்கள் தீவிரமாகப் பரவும் காரணத்தினால், களத்தில் இருக்கும் உங்களுக்கு எங்களின் தொழில்நுட்பத்தைக் கொண்டு எப்படி சிறப்பாகவும் பலனளிக்கும் வகையிலும் உதவ முடியும் எனச் சிந்தித்தோம். இதனால், படையெடுக்கும் பூச்சிகளை நிகழ் நேரத்தில் தடம் அறியும் “பிளான்டிக்ஸ் பூச்சித்தடப் பொறி” எனும் புதிய கருவியை உங்களுக்கு வழங்குகிறோம். இந்தக் கருவியை இந்தியாவில் மிகவும் பொதுவாக, படையெடுக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களின் வரைபடங்களுடன் படிப்படியாக விரிவுபடுத்துவோம், இதன்மூலம் உங்களிடம் நம்பகமான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு புதுப்பித்த நிலையில் எப்போதும் உங்கள் கையில் இருக்கும்.

தகவல் ஆதாரம்: எங்களது விவசாய பயன்பாட்டியான பிளான்டிக்ஸ் மூலம், இந்தியாவிலிருந்து மட்டும் 20,000 ற்கும் மேற்பட்ட படங்களை நாங்கள் தினந்தோறும் பெறுகிறோம். இத்தகவலைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டு அதனை அனைத்துத் தரப்பினரிடமும் பகிர்கிறோம். நேரலை தடமறியும் வரைபடங்களில் இடம் பெறும் தகவல் கூறுகள் நிபுணர்களால் சரிபார்க்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு ஒருங்கிணைப்புத் தகவல்களும் 10 கிலோமீட்டருக்கு துல்லியமாக அடையாளம் தெரியாத வகையில் தொகுக்கப்பட்டு தினமும் புதுப்பிக்கப்படுகிறது. வரையறுக்கப்படாத தகவல்களைப் பெறவோ அல்லது வரைபடத்தில் உங்களது தகவலைச் சேர்க்கவோ, தயவுசெய்து contact@peat.ai என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.