Fall Armyworm

சூழல்

விழு படைப்புழு என்னும் கம்பளிப்புழு வலுவாக ஊடுருவும் குணம் உடையது. அமெரிக்க கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட்ட இந்த விழு படைப்புழு, சமீபத்திய வருடங்களில் ஆஃப்பிரிக்காவைக் கடந்து ஐரோப்பா மற்றும் தூரக்கிழக்குப்பகுதிகளில் தொடர்ந்து பரவி வருகிறது.அதன் பயண வழியெங்கும், விழு படைப்புழு கம்பளிப்புழுவானது மக்காச்சோளம், சோளம் மற்றும் சிறுதானியங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திப் பல லட்சம் விவசாயிகளை நிர்க்கதியாக்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் இந்தியாவில் இக்கம்பளிப்புழுவின் பல நிரூபிக்கப்பட்ட சம்பவங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எங்களது மாதிரிகள் அது தொடர்ந்து பரவி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இக்காரணத்தால் இக்கம்பளிப்புழு தொடர்பாக நாங்கள் முதல் நேரலை பூச்சித்தடம் அறியும் பொறியை உருவாக்கியுள்ளோம். நாங்கள் உங்களை எச்சரிக்கை செய்வதோடு சமகாலத்தில் தகவல் அளித்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். எங்களது நிபுணர்களின் வலையமைப்பு ஒத்துழைப்பின் மூலம் Plantix நோய் நூலகத்தைப் புதுப்பித்துள்ளோம். அதனைக் கண்டு சமீபத்திய பயிர் அடிப்படையிலான நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை வழிமுறைகள்குறித்துறிந்து கொள்ளுங்கள்.

சுருக்கமாக

  • அனைத்து தாவர பாகங்களிலும் உண்ணும் சேதங்கள்.
  • கந்தலான இலை ஓரங்கள்.
  • இலை உதிர்வு.

We provide this interactive map to embed on your website.
Insert the following code and share this information:

<iframe width="400px" height="300px" src="https://plantix.net/maps/Fall-Army-Worm-expert-annotation.html"></iframe>

தகவல் ஆதாரம்: எங்களது விவசாய பயன்பாட்டியான Plantix மூலம், இந்தியாவிலிருந்து மட்டும் 20,000 ற்கும் மேற்பட்ட படங்களை நாங்கள் தினந்தோறும் பெறுகிறோம். இத்தகவலைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டு அனைத்துத் தரப்பினரிடமும் பகிர்கிறோம். நேரலையான தடமறியும் வரைபடங்களில் இடம் பெறும் தகவல் கூறுகள் நிபுணர்களால் சரிபார்க்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு ஒருங்கிணைப்புத் தகவல்களும் பத்து கிலோமீட்டருக்கு துல்லியமாக அடையாளம் தெரியாத வகையில் தொகுக்கப்பட்டு தினமும் புதுப்பிக்கப்படுகிறது. வரையறுக்கப்படாத தகவல்களைப் பெறவோ அல்லது வரைபடத்தில் உங்களது தகவலைச் சேர்க்கவோ, தயவுசெய்து contact@peat.ai என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.